நீலகிரி மாவட்டம் குன்னூரில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு முன்னதாக 15க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட கோல போட்டிகள் நடைபெற்றன. இதில் பல்வேறு வண்ணங்களில் பெண்கள் ரங்கோலி போன்ற கோலங்களை வரைந்து அசத்தினர்.
மேலும் பெண்களுக்கான பொங்கல் தயாரிக்கும் போட்டிகளும் நடைபெற்றன. இதில் வெள்ளம், கோதுமை போன்ற பாரம்பரிய முறைப்படி பெண்கள் பொங்கலை தயாரித்தனர். ஒவ்வொரு போட்டியாளரின் பொங்கலும் சுவைத்து மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. கிராமிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், மயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
ஒரே நேரத்தில் பல்வேறு மதத்தினர் ஒன்றாக சேர்ந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடியது குன்னூர் பகுதியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தனியார் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்!