ETV Bharat / state

பூங்காவில் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் தடுப்புச் சுவர் - பொதுமக்கள் வரவேற்பு!

author img

By

Published : Sep 15, 2020, 8:09 PM IST

நீலகிரி: குன்னூர் நகராட்சி சார்பில், வீணாகும் பிளாஸ்டிக்கை கொண்டு அமைக்கப்பட்ட பூங்காவின் தடுப்புச் சுவர் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

plastic-wall-set-up-in-the-park-public-welcome

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்குட்பட்ட, 30 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பையானது, ஒட்டுப்பட்டறை பகுதியில் உள்ள குப்பை குழியில் கொட்டப்படுகின்றன. இந்த 'குப்பை' கூள மேலாண்மை பூங்காவில், தன்னார்வ அமைப்பு மூலம் பிரிக்கப்படும் வீணாகும் பிளாஸ்டிக் பொருள்கள், பேலிங் இயந்திரம் மூலம் 200 கிலோ பிளாஸ்டிக் ஒரு பிரிவாக கொட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கம்ப்ரஸ் செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை கொண்டு குன்னூர் நகராட்சி மூலம் உழவர் சந்தை அருகேயுள்ள பூங்காவில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. மேலும் வீணாகும் பிளாஸ்டிக்கை கொண்டு குன்னூர் பகுதியில் அமைக்கப்பட்ட முதல் தடுப்புச் சுவர் இதுவாகும்.

பூங்காவில் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் தடுப்புச் சுவர்

அதேசமயம் இந்த சுவர் வீட்டின் சுற்றுச்சுவர் அமைக்க ஏதுவாக அமையும் என்றாலும், மழை காலங்களில் ஏற்படும் மண் சரிவு, நிலச்சரிவு போன்றவற்றால் இந்த பிளாஸ்டிக் சுவர் அடியோடு சரிந்து விழும் அபாயம் உள்ளது எனவும் தன்னார்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க:கூடுதல் ஆணையர் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு: பணம் பறிக்க நூதன முயற்சி...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.