உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காமராஜபுரம் பகுதியில் வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற பகுதிகளில் இருந்து வரக்கூடிய பொது மக்களை கிராமத்திற்குள் நுழைய முழு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கரோனா பீதியால் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மரங்களை வெட்டி கிராமத்தின் நுழைவு வாயிலில் மக்கள் யாரும் வராதபடி வைத்துள்ளனர். தொடர்ந்து கிராமத்தில் நோய் வராமல் இருக்க மூலிகை கசாயம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கிராம மக்கள் கையில் காப்பு கட்டியும், கிராமம் முழுவதும் வேப்பிலை கட்டியும் வருகின்றனர். இதனால் கரோனா வைரஸ் கிராமத்திற்குள் வராது என மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: திமுக சார்பில் பணியாளர்களுக்கு இலவச முகக் கவசம்