நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பாலசுப்பிரமணியர் கோயில் உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வழிபாடு நடத்தி செல்கின்றனர். திருவிழா காலங்களான கந்த சஷ்டி, தைப்பூசம், கார்த்திகை, பங்குனி உத்திரம், பிரதோஷம் போன்ற நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் இக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்துடன் பழனி மலைக்கு பாதையாத்திரையாக சென்று வருகின்றனர். அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலை புனரமைக்கவும் மகா மண்டபம் அமைக்கவும் 65 லட்சம் ரூபாய் செலவில் கடந்த மாதத்தில் பணிகள் தொடங்கின.
கோயில் மேல்பகுதி முழுவதும் இடிக்கப்பட்டதில் பழங்கால பொருட்களான தேக்கு மரங்கள், இரும்பு லேடர் போன்ற பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பக்தர்களும் பொதுமக்களும் வழிபாட்டுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோயிலில் இருந்து எடுக்கப்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் கொண்டு செல்வதிலும் நிர்வாகம் குளறுபடி செய்துள்ளது. கோயில் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக இந்து அறநிலையத்துறை கோயில் பணிகளை விரைந்து முடிக்கவும் கோயிலில் இருந்து எடுக்கப்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் பாதுகாக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பழங்குடியின மக்களின் வீட்டிற்கே சென்று சாதி சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர்...!