நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அளியூர் கிராமத்திலுள்ள தனியார் சொகுசு விடுதிகளில் சென்னையைச் சேர்ந்த 9 பேர் கடந்த மாதம் தங்கியிருந்தனர். அவர்கள், அப்பகுதியில் நடைபயணம் மேற்கொண்டபோது, அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். சென்னையைச் சேர்ந்தவர்களால் தங்களுக்கு கரோனா தொற்று ஏற்படும் என காவல் துறை, சுகாதாரத் துறைக்கு தகவலளித்தனர். அதன்பின், அங்கு வந்த அலுவலர்கள் அவர்களைத் திருப்பி அனுப்பினர்.
இந்தச் சூழ்நிலையில், அதே விடுதிக்கு சென்னையிலிருந்து நான்கு பேர் வந்ததையடுத்து பொதுமக்கள் அவ்விடுதியை முற்றுகையிட்டனர். பின்பு, அங்கு வந்த காவல் துறை, சுகாதாரத் துறை அலுவலர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னையைச் சேர்ந்தவர்களை திருப்பி அனுப்புவதாக காவல் துறையினர் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். முறையான அனுமதியில்லாமல் வருபவர்களைத் மாவட்ட சோதனைச் சாவடிகளிலே தடுத்து நிறுத்தவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் வழங்கக்கோரி போராட்டம்!