நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் கண்டோன்மெண்ட் வாரியம் உள்ளது. ராணுவ பகுதியான இந்தப் பகுதி கன்டோன்மென்ட் வாரிய நிர்வாக கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்நிலையில், கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு காரணமாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அத்தியாவசிய தேவையான காய்கறிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலம் வாகனங்களில் சென்று விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இதில், கண்டோன்மென்ட் வாரியத்தில் காய்கறிகள் விற்பனை செய்ய ஆறு வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ராணுவ பகுதியான பிளாக் பிரிட்ஜ், ஸ்டாப் காலேஜ், பேராக்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் காய்கறிகளை பொதுமக்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால்,அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
காய்கறி கிடைக்காமல் மக்கள் அவதி! - Nilgiris vegetables sale
நீலகிரி : வெலிங்டன் கண்டோன்மெண்ட் வாரியத்தில் தோட்டக்கலைத் துறையால் அனுமதிக்கப்பட்ட ஆறு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் பொதுமக்கள் காய்கறி கிடைக்காமல் அவதி அடைந்தனர்.