நீலகிரி: உதகை அருகே பிங்கர்போஸ்ட் பகுதியில் கிறிஸ்தவ சபை நடத்தி வருபவர் சூரியமூர்த்தி. இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
அப்போது சிறுமியின் கூச்சல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சிறுமியை மீட்டனர். இதனைத் தொடர்ந்து, உதகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் உறவினர்கள் மதபோதகர் மீது புகார் அளித்தனர்.
இதனையடுத்து, மதபோதகரை கைது செய்து, உதகை மகிளா நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, மதபோதகரை பிப்ரவரி 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், மதபோதகர் கோவை மத்திய சிறையில் அடைப்பட்டார்.
இதையும் படிங்க: கர்ப்பமடைந்த மாணவி மரணம்: மறைத்த தலைமையாசிரியர், வார்டன் கைது