நீலகிரி மாவட்டம் கூடலூர் காசிம் வயல் பகுதியைச் சேர்ந்த, துணை ராணுவப் படை வீரர் ராம்குமார்(31) அசாம் எல்லையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை இயந்திரத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதற்கான சரியான காரணங்கள் இன்னும் அறியப்படாத நிலையில், இதுகுறித்து ராணுவத் தலைமை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது.