ETV Bharat / state

குன்னூரில் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் திறப்பு

நீலகிரி: குன்னூர் காட்டேரி தோட்டக்கலை பண்ணையில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் சார்பில் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் திறக்கப்பட்டது.

Collector
Collector
author img

By

Published : Jul 9, 2021, 9:13 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி தோட்டக்கலை பண்ணையில் நாற்று, இயற்கை உரங்களான மண்புழு உரம், பஞ்சகவியா, தசகவியா உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலையில், விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இங்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் ரூ. 10 லட்சம் மதிப்பிலான உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் அமைக்கப்பட்டது. இங்கு விவசாயிகளுக்கு தேவையான உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், உயிர் உரங்கள் ஆகியவை உற்பதி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட உள்ளது.

இந்த ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். ஆண்டுக்கு 500 கிலோ டிரைகோடெர்மா, 3 ஆயிரம் கிலோ பேசில்லஸ் போன்ற உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், தலா 1,000 கிலோ அளவிலான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர் உரங்களை உற்பத்தி செய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

டிரைக்கோடெர்மா, பேசில்லஸ் போன்ற உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை பயிர்களில் விதை நேர்த்தி மற்றும் மண்ணில் இடுவதன் மூலம் பயிர்களை தாக்கும் வேர் அழுகல், வாடல் நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.

அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர் உரங்கள் மண் வளத்தை மேம்படுத்துவதற்கும் மண்ணில் உள்ள சத்துக்களை எளிதாக தாவரங்கள் எடுத்துக் கொள்ளும் வகையிலும் உதவுகிறது.

இதையும் படிங்க: 'சென்னையில் அதிநவீன சைபர் ஆய்வகம்' இனி ஓடவும் முடியாது! ஒளியவும் முடியாது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.