நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வெளி மாவட்டம், வெளிமாநிலத்தினர் ஆகியோர் நீலகிரி வருவதற்கு இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான இணையதளத்தில் மருத்துவ சிகிச்சைக்கு மட்டுமே விண்ணப்பிக்க வழிவகை செய்யபட்டுள்ளது.
திருமணம், இறப்பு உள்ளிட்டவைகளுக்கு சென்று வர விண்ணப்பிக்க அதில் வசதி இல்லை. இதனால் வாடகை கார்களை (டேக்ஸி) இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, இ-பாஸ் இணையதளத்தில் மாற்றம் செய்ய கோரியும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு நிவாரண நிதி வழங்க கோரியும் உதகை வாடகை கார் ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யாவிடம் மனு அளித்து கோரிக்கைவைத்தனர்.
இதையும் படிங்க: ’நீட் வேண்டாம் என்பதே பெரும்பாலானோர் கருத்து’ - நீதிபதி ஏ.கே.ராஜன் தகவல்