தமிழ்நாட்டிலேயே நீலகிரி மாவட்டத்தில் தான் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் நீலகிரி வரலாற்றில் முதன் முறையாக 95.02 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 88.06 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதனால் நீலகிரி மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருள்கள் விலை இரட்டிப்பு விலைக்கு விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மலை மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலையேற்றத்தால் சுற்றுலா வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர். எனவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை குறைக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மருத்துவ படிப்பிற்கு சீட் வாங்கி தருவதாகக்கூறி பணமோசடி - சித்ராவின் கணவர் ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீன்