நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகே உள்ள மெட்டுக்கல் அடுத்துள்ள பழங்குடியினர் கிரமத்தில் வசித்த வந்தவர்கள் ராமச்சந்திரன், பிம்மன். இவர்கள் இருவரும் ஜன.10ஆம் தேதி இரவு அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்திற்கு காவல் பணிக்கு சென்றனர். பின் மறுநாள் காலையில் தோட்டத்தின் உரிமையாளர் தோட்டத்திற்கு வந்து பார்த்தபோது இருவரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர்.
இதனையடுத்து, உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலை குறித்து தீவரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், ராமச்சந்திரன், பிம்மனை கொலை செய்த வழக்கில் மெட்டுக்கல் பகுதியை சேர்ந்த பாபு, ஜே.குமார், மகேந்திரன், கிருஷ்ணன், மூர்த்தி, கே. குமார் ஆகிய ஆறு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சொத்து தகராறு, காதல் விவகாரத்தில் கொலை நடந்திருப்பதாக தெரியவந்தது. பின் ஆறு பேரையும் சிறையில் அடைத்தனர்.