ETV Bharat / state

மகிழ்ச்சியில் 500 கிலோ எடை கூடிய மசினி யானை!

சென்னை: சமயபுரம் கோயிலில் இருந்து மீண்டும் முதுமலைக்கு வந்த மசினி யானை, குதூகலமாக நடமாடி வருகிறது.

மசினி யானை
author img

By

Published : Jul 3, 2019, 7:27 PM IST

கடந்த 2006ஆம் ஆண்டு முதுமலைக்கு உட்பட்ட கார்குடி வனத்திலிருந்து மூன்று மாத குட்டியான மசினி, தெப்பக்காடு முகாமிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் 2015ஆம் ஆண்டு மசினி யானைக்கு 9 வயது நிரம்பிய போது, சமயபுரம் கோயிலுக்கு ஆன்மீக பணிகள் ஆற்றச் சென்றது.

அங்கு அதிகமான சப்தம், அதிக மக்கள் கூட்டத்தை பார்த்ததும் மிரண்டுபோனது. இதில் ஆத்திரம் அடைந்த மசினி யானை கோயிலில் தன்னை பராமரித்த பாகனையே மிதித்து கொன்றது. இதனால் மசினி யானைக்கு ஒரத்தநாடு கால்நடை பல்கலைகழகத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

மீண்டும் தாய் வீட்டுக்கு வந்த மிசினி யானை!

இதனையடுத்து மசினி யானையை முதுமலைக்கு கொண்டு சென்று பராமரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனால் நான்கு ஆண்டுக்கு பின்னர் கடந்த ஜனவரி மாதம் மசினி யானை, தனது தாய்வீடான முதுமலைக்கு கொண்டு வரப்பட்டது.

மீண்டும் தாய் வீட்டுக்கு வந்த மிசினி யானை!

மசினி முதுமலை வரும்போது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சோர்வாக காணப்பட்ட நிலையில், தற்போது முதுமலையின் இயற்கையே அவற்றை குணப்படுத்தியுள்ளது. இங்கு வரும்போது 1900 கிலோ எடையில் இருந்த மசினி, 6 மாதத்தில் மட்டும் 500 கிலோ எடை கூடியுள்ளது. தற்போது உற்சாகமாக மேய்ச்சலில் ஈடுபடுகிறது.

Intro:OotyBody:
PACKAGE
உதகை 03-07-19
சமயபுரம் கோயிலில் இருந்து மீண்டும் முதுமலைக்கு வந்த மசினி யானை. குதூகலமாக நடமாடி வருவதுடன் 500 கிலோ எடை கூடியுள்ளது.
2006-ம் ஆண்டு முதுமலைக்கு உட்பட்ட கார்குடி வனத்தில் 3 மாத குட்டியாக மசினி தெப்பக்காடு முகாமிற்;கு கொண்டு வரப்பட்டது. பின்னர் இந்த குட்டிக்கு மசினி என பெயரிட்டு, 9ஆண்டுகள் யானைகள் முகாமில் இருந்து 12 வயது மசினி யானை திருச்சி சமயபுரம் கோயிலுக்கு ஆன்மீக பணிகள் ஆற்ற கடந்த 2015-ம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டது. வனப்பகுதியில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த மசினி, சங்கிலியால் பிணையப்பட்டு சமயபுரம் கோயிலில் ஒரே இடத்தில் கட்டி வைக்கப்பட்டது. அதிகமான சப்தம் மற்றும் மக்கள் கூட்டத்தை பார்த்ததும் மிரண்டுபோனது. இதில் ஆத்திரம் அடைந்த மசினி கோயிலில் தன்னை பராமரித்த பாகனையே மிதித்து கொன்றது. இதையடுத்து மசினி யானையை ஒரத்தநாடு கால்நடை பல்கலைகழகத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மசினி யானையை முதுமலைக்கு கொண்டு சென்று பராமரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. கடந்த ஜனவரி மாதம் மசினி யானை முதுமலைக்கு கொண்டு வரப்பட்டது. மசினி யானை நான்கு ஆண்டுக்கு பின்னர் மீண்டும் தாய் வீட்டுக்கு திரும்பியுள்ளது. இனி இங்கேயே நிரந்திரமாக வைத்து பாராமரிக்கபட உள்ளது. உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் சோர்வான நிலையில் காணப்பட்ட நிலையில், முதுமலையின் இயற்கையே பாதி குணப்படுத்தியது. இங்கு வரும்போது 1900கிலோ எடையில் இருந்த மசினி 6 மாதத்தில் மட்டும் 500 கிலோ எடை கூடியுள்ளது. தற்போது உற்சாகமாக மேய்ச்சலில் ஈடுபடுகிறது. இங்கு வந்த போது ஊட்டச்சத்து குறைபாட்டாலும், பல காயங்களாலும் நடக்க முடியாத நிலையில் இருந்தது. யானையை குளிக்க வைக்க மாயாறு ஆற்றுக்கு மிகுந்த சிரமத்துடன் நடந்து சென்ற மசினி யானை தற்போது குதூகலமாக குளிக்க நடந்து செல்கிறது. கடந்த நாட்களில் விநாயகர் சதுர்த்தி விழாக்களில் தெப்பக்காட்டில் விநாயகர் கோயிலில் மணி அடித்து, மண்டியிட்டு விநாயகருக்கு பூஜை செய்யும் மசினியை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழச்சி அடைந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
பேட்டி : கௌஷல் - முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர்
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.