நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ குணம் நிறைந்த பழங்களான துரியன், முள் சீதா, பெர்சிமன், லிச்சி உள்ளிட்ட பழங்கள் விளைந்துவருகின்றன. அக்டோபர் மாதங்களில் அதிகளவில் விளையக்கூடிய மருத்துவ குணம் நிறைந்த லிச்சி பழ சீசன் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
சீனாவை தாயகமாகக் கொண்ட இப்பழம் இதய நோய்களை குணப்படுத்துவதுடன், ரத்தக்குழாய்களையும் வலுப்படுத்துகிறது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் இப்பழங்களை வாங்கிச் செல்கின்றனர். கிலோ ரூ.250 முதல் ரூ.350 வரை லிச்சி பழம் விற்பனை செய்யப்படுகிறது.