நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கொடநாடு எஸ்டே்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சயான், வாளையாறு மனோஜ், தீபு, பிஜின் குட்டி, உதயக்குமார், மனோஜ்சாமி, ஜித்தின் ஜாய், சந்தோஷ் சாமி , ஜம்சீர் அலி மற்றும் சதீசன் என 10 பேரும் உதகமண்டலம் அமர்வு நீதிமன்றம் நீதிபதி வடமலை முன்பு ஆஜராகினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை வருகின்ற ஆகஸ்டு மாதம் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். வழக்கு விசாரணையின் அன்று இந்த 10 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.