சீனாவைத் தாயகமாகக் கொண்ட கொரோனா வைரஸ் நோய், அந்நாட்டை அதிகமாக பாதிப்படையச் செய்துள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள், இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதுடன் ஆயிரக்கணக்கில் இறந்து வருகின்றனர்.
இந்தியாவில் வேகமாகப் பரவி வரும், இந்த நோய்த்தொற்றால் தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் 12 பேருக்கும் கர்நாடகாவில் 4 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை இன்று உதகை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்குத் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரான 10 பேரும் கேரளாவைச் சார்ந்தவர்கள் ஆவர். கேரளாவில் கொரோனா மற்றும் பறவைக்காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களான சதீசன், மனோஜ், பிஜின் குட்டி, சந்தோஷ் சமி, ஜித்தின் ஜாய், தீபு, ஜாம்சீர் அலி, உதய குமார் ஆகியோர் இன்று வழக்கு விசாரணைக்கு பாதுகாப்பாக முகக்கவசம் அணிந்து நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
அவர்கள் அருகே செல்ல வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: கொரோனாவால் நீண்ட விடுப்பு கேட்ட மாணவன் - வைரலான கடிதம்