ETV Bharat / state

நீலகிரி செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

நீலகிரி: கல்லட்டி அருவிப் பகுதியில் எந்தவொரு பாதுகாப்பும் இல்லாத நிலையில் நீலகிரி வரும் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

kallati-falls
author img

By

Published : Apr 28, 2019, 10:14 AM IST

கோடை சீசன் தொடங்கிய நிலையில், சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் வருகின்றனர்.

மேலும், வன விலங்குகளைக் காண ஆர்வம் காட்டும் சுற்றுலாப் பயணிகள், முதுமலைக்கு உதகையிலிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக செல்லும்போது அங்குள்ள அருவியின் அழகைக் காணவும் செல்கின்றனர்.

கல்லட்டி நீர்வீழ்ச்சி

வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவிக்குச் செல்ல நடைபாதை இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் முற்களுக்கு நடுவே நடந்து செல்கின்றனர். அவ்வாறு செல்கையில், வழுக்கும் பாறைகளின் மீது அத்துமீறி ஏறி புகைப்படம் எடுத்துவருகின்றனர்.

பாறைகளிலிருந்து கீழே விழுந்து பல சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ள நிலையில், இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத் துறையினர் அறிந்தும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பிற்காக எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

உதகை             28-04-19
சுற்றுலா பயணிகளுக்கு எமனாக மாறி வரும் கல்லட்டி நீர்வீழ்ச்சி. கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்.

முக்கிய சுற்றுலா தலமாக உள்ள நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் என்பதாலும், இதமான காலநிலையை அனுபவிக்கவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை காண ஆர்வம் காட்டி வருகின்றனர். வனவிலங்குகளை காண முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் செலுகின்றனர். முதுமலைக்கு    உதகையிலிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் கல்லட்டியில் உள்ள நீர்வீழ்ச்சியை காண செல்கின்றனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கல்லட்டி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவொரு பாதுகாப்பும் இல்லாத நிலையே உள்ளது. நடைபாதை இல்லாமலும், முற்களுக்கு நடுவே சுற்றுலா பயணிகள் ஊர்ந்து செல்கின்றனர். அவ்வாறு செல்லும் சுற்றுலா பயணிகள் அத்துமீறி  வழுக்கும் பாறைகளின் மீது ஏறி புகை படம் எடுத்து வருகின்றனர். தங்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று அறியாத சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியின் அருகில் செல்கின்றனர். பாறைகளிலிருந்து கீழே விழுந்து பல சுற்றுலா பயணிகள் உயிரிழிந்துள்ளனர் என மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை அறிந்தும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளபடவில்லை. இந்த நீர்வீழ்ச்சியில் நடைபாதை, ஆபத்தை உணர்த்தும் வாசகம் அடங்கிய பதாகை, பாதுகாப்பிற்காக   வனத்துறை ஊழியர் நியமித்தல் உள்ளிட்டவை இருந்தால் மட்டுமே சுற்றுலா பயணிகள் உயிர்களை பாதுகாக்க முடியும். 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.