மலைகளின் அரசியான நீலகிரியில் கோடை சீசன் துவங்கியுள்ளது. கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் இதன் முதல் நிகழ்ச்சியாக உதகை குதிரை பந்தய மைதானத்தில் 133-வது குதிரைப்பந்தய போட்டி ஏப்ரல் 14-ம் தேதி முதல் துவங்குகிறது. எனவே பந்தயங்களில் பங்கு பெற பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற பகுதிகளிலிருந்து 500 பந்தய குதிரைகள் வந்து இறங்கியுள்ளன. மேலும், குதிரைகளுக்கு பயிற்சியளிப்பதற்காக 26 பயிற்ச்சியாளர்கள், 50 குதிரை ஓட்டும் ஜாக்கிகள் வந்துள்ளனர்.
இந்த இரண்டு மாதங்களில் சனி, ஞாயிறு மட்டும் குதிரை பந்தய போட்டி நடைபெறுகிறது. அவ்வாறு நடக்கும் இந்த குதிரை பந்தய போட்டி ஏப்ரல் 14-ம் தேதி துவங்கி ஜீன் 14-ம் தேதி வரை நடைப்பெறுகின்றன.வெற்றி பெறும் குதிரைகளுக்கு ரு.6 கோடியே 44 லட்சம் பரிசுகள் வழங்கப்படுகிறது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கான ஏற்பாடுகளை சென்னை மெட்ராஸ் ரேஸ் கிளப் செய்து வருகிறது.