மலைகளின் அரசி என்றழைக்கபடும் உதகையைச் சுற்றிப் பார்க்கத் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சுமார் ஒரு லட்சம் பேர் வசித்துவரும் உதகையில், ஆண்டிற்கு சுமார் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நகரில் உள்ள முக்கிய சாலைகளில் சமீப காலமாக ஏராளமான குதிரைகள் கேட்பாரின்றி சுற்றித் திரிகின்றன. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் சாலைகளில் சுற்றித் திரியும் இந்தக் குதிரைகள், சுற்றுலாப் பயணிகளைக் கடிக்கவும், உதைக்கவும் செய்கின்றன.
இதுகுறித்து பலமுறை நகராட்சியிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். எனவே உதகை நகரில் சுற்றித் திரியும் குதிரைகளைப் பிடிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்கலாமே: 6 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்!