ETV Bharat / state

நகரத்துக்குள் நுழைந்த காட்டு யானைகளால் ஆயிரக்கணக்கான வாழைமரங்கள் சேதம்! - வாழைமரங்கள்

நீலகிரி: காட்டு யானைகள் நகரத்துக்குள் நுழைந்து, ஆயிரக்கணக்கான வாழை மரங்களை சேதப்படுத்தின.

வாழைமரங்கள் சேதம்
வாழைமரங்கள் சேதம்
author img

By

Published : Apr 8, 2020, 6:18 PM IST

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வாழை, பாகற்காய், புடலங்காய் போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர். கரோனாவால் கடும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கூடலூரை அடுத்துள்ள ஏழுமரம் நகரப்பகுதிகளில், நேந்திரன் வாழை விவசாயம் செய்துள்ளனர். வாழைத்தார்கள் அடுத்த மாதம் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், 144 தடை உத்தரவு அனைத்தையும் மாற்றியது.

மக்கள் கூட்டம் வெளியில் வராத காரணத்தால், சுதந்திரமாக உலவிய காட்டு யானைகள் அதிகாலை வேளையில் வாழைத்தோட்டத்தில் புகுந்து லட்சக்கணக்கில் மதிப்புள்ள ஆயிரக்கணக்கான வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளன. முன்னதாக, கடந்த மாதத்தில் ஏழுமரம் பகுதியிலுள்ள ஒரு தனியார் தோட்டத்தில் பணிக்குச் சென்ற தொழிலாளியை தாக்கி காயப்படுத்தியுள்ளது. அதற்கும், தற்போது ஏற்பட்டுள்ள சேதத்திற்கும் அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்தனர்.

இதையும் படிங்க: பொதுமக்களுக்கு உதவ தன்னார்வலர்கள் - ஆட்சியர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.