ETV Bharat / state

நீலகிரியில் பட்டாசு வெடிக்கத் தடை! - முதுலை புலிகள் காப்பகம்

நீலகிரி: உதகை அருகே மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் பட்டாசு வெடிக்கத் தடை விதித்து முதுமலை புலிகள் காப்பக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

forest
forest
author img

By

Published : Nov 10, 2020, 11:49 AM IST

Updated : Nov 10, 2020, 11:58 AM IST

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்பட பல்வேறு விலங்குகள் உள்ளன. தீபாவளி பண்டிகையையொட்டி, புலிகள் காப்பகத்தை ஒட்டிய கிராமங்களுக்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

நீலகிரியில் பட்டாசு வெடிக்கத் தடை

மசினகுடி, மாயார், சிங்காரா, பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம், சிறியூர், ஆனைக்கட்டி உள்ளிட்ட கிராம மக்கள் பட்டாசு வெடிக்கக் கூடாது. பட்டாசு வெடிப்பதால் கருவுற்ற வன விலங்குகள் அச்சத்தில் ஓடும்போது கரு கலைய வாய்ப்புள்ளது.

அதனைமீறி, பட்டாசு வெடிப்பவர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க 2 தனிப்படை அமைத்துள்ளதாகவும் புலிகள் காப்பக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஹைதராபாத் வெளிவட்ட சாலையில் விபத்து - 6 பேர் பலி; 4 பேர் படுகாயம்

Last Updated : Nov 10, 2020, 11:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.