இந்தியாவில் கரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்ககொண்டு வருகிறது. இந்நிலையில், நீலகிரியில் இன்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், நீலகிரி மாவட்டத்திற்கு மார்ச் ஒன்றாம் தேதி முதல் தற்போது வரை வெளிநாடுகளிலிருந்து வந்த 44 பேரும், கேரளா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து வந்த 98 பேர் என 142 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, அவரவர் வீடுகளில் சுவரொட்டி ஒட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
கரோனாவைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு!
அப்படி தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளையோ, அந்த நபர்களையோ புகைப்படம் எடுத்து செய்திகள் அல்லது சமூகவலைதளங்களில் வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மேலும், உதகை அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் கரோனா நோய்க்கான தனி அறைகள் தயார் நிலையில் உள்ளது எனவும், தேவை ஏற்பட்டால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.