ETV Bharat / state

மலர் கண்காட்சிக்கு ஊட்டி தாவரவியல் பூங்கா தயாராகிறது! - ooty botanical garden

உதகை: மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்கா தயார் செய்யப்படுகிறது என தோட்டக்கலைத்துறை அலுவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ooty botanical garden
author img

By

Published : Jul 25, 2019, 7:52 AM IST

உதகையில் மலர் கண்காட்சிக்கான முதல் சீசன் ஏப்ரல்,மே மாதத்திலும், இரண்டாவது சீசன் செப்டம்பர் முதல் நவம்பர் வரையும் இருக்கும் . இந்த சீசன்களின் போது நிலவும் இதமான காலநிலையை அனுபவித்து செல்ல ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இரண்டாவது சீசனில் சுமார் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதற்காக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 2.5லட்சம் மலர் செடிகள் நடவுசெய்யும் பணி தொடங்கியுள்ளது.இன்கா மேரி கோல்டு, ஆஸ்டர், கேலண்டுள்ளா, பெட்டுனியா உள்ளிட்ட 70 வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யபடுகிறது . அதுமட்டுமின்றி சீசனையொட்டி நடைபெற உள்ள மலர் கண்காட்சியில் வைப்பதற்காக 10 ஆயிரம் மலர் தொட்டிகளில் மலர் செடிகளை நடவு செய்யும் பணியும் தொடங்கியுள்ளது என தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஊட்டி தாவரவியல் பூங்கா

அத்துடன் பூங்காவில் பல்வேறு பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது நடவு செய்யும் மலர் செடிகள் அனைத்தும் செப்டம்பர் முதல் வாரத்தில் பூத்துக் குலுங்கத் தொடங்கும் என்பதால் வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Intro:OotyBody:
உதகை 24-07-19
உதகை தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசனை முன்னிட்டு 2.5 லட்சம் மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணி தொடங்கியது. மலர் மாடங்களில் 10 ஆயிரம் மலர் தொட்டிகளும் வைக்கபடும் என தோட்டக்கலைத்துறை அதிகாரி தகவல்.
உதகையில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதத்தில் கோடை சீசனும், செப்டம்பர் முதல் நவம்பர் வரை இரண்டாவது சீசனும் நிலவி வருகிறது. இந்த சீசன்களின் போது நிலவும் இதமான காலநிலையை அனுபவித்து செல்ல ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டு இரண்டாவது சீசனுக்கு சுமார் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 2.5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கி உள்ளது.
இன்கா மேரி கோல்டு, ஆஸ்டர், கேலண்டுள்ளா, பெட்டுனியா உள்ளிட்ட 70 வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யபடுகிறது. அதுமட்டுமின்றி இரண்டாவது சீசனையொட்டி நடைபெற உள்ள மலர்கண்காட்சியில் வைக்க 10 ஆயிரம் மலர் தொட்டிகளில் மலர் செடிகளை நடவு செய்யும் பணியும் தொடங்கி உள்ளது. அத்துடன் பூங்காவில் பல்வேறு பராமரப்பு பணிகளும மேற்கொள்பட்டு வருகிறது. தற்போது நடவு செய்யப்படும் மலர் செடிகள் அனைத்தும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் பூத்து குலுங்க தொடங்குவதால் வருகின்ற சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
பேட்டி: ராதாகிருஷ்ணன் - தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்.
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.