நீலகிரி மாவட்டத்தில் 60 விழுக்காடு வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள், வரையாடுகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உயிர் வாழ்கின்றன. இவற்றை கணக்கெடுக்கும் பணி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில், நீலகிரி வனக்கோட்டத்தில் உள்ள அவலாஞ்சி, பார்சன்ஸ் வேலி, குந்தா, குன்னூர், பைக்காரா உள்ளிட்ட வனப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது. இந்த பணியில் வனத்துறை ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதில் நேரடி கணக்கெடுப்பு, மறைமுக கணக்கெடுப்பு, நீர் நிலைகளுக்கு சென்று கணக்கெடுக்கும் பணியினை மேற்கொண்டுள்ளனர். ஒரு குழுவிற்கு ஒரு வனத்துறை ஊழியர், மூன்று தன்னார்வலர்கள் என 63 குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
இன்று தொடங்கியுள்ள இந்த கணக்கெடுப்பு பணி 14ஆம் தேதி மாலைவரை நடைபெறும். இந்த ஆண்டு முதல்முறையாக காட்டெருமைகள், யானைகளை கணக்கெடுக்க அதிக முக்கியதுவம் அளிக்கப்பட்டுள்ளதாக பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கிராமியக் கலைகளுக்கு உயிரூட்டும் கணித ஆசிரியை!