ETV Bharat / state

'சில்லஹல்லா நீர்மின்' திட்டத்திற்கு 15 கிராம மக்கள் எதிர்ப்பு! - Kunda River tributary

உதகை: 'சில்லஹல்லா' நீர்மின் திட்டத்தின் கீழ் அணை கட்டவும், நீர்மின் நிலையம் அமைக்கவும் 15 கிராம மக்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ooty
ooty
author img

By

Published : Jan 6, 2020, 12:33 PM IST

ஜெயலலிதா அறிவித்த திட்டம்

நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே குந்தா நதியின் துணை நதியான ’சில்லஹல்லா’ ஆற்றின் குறுக்கே அணை கட்டி ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 2 ஆயிரம் மெகாவாட் திறன்கொண்ட ’சில்லஹல்லா’ நீர்மின் திட்டமானது செயல்படுத்தப்படும் என 2013ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

ஒரே கட்டமாக 2 ஆயிரம் மெகாவாட் திறன்கொண்ட ’சில்லஹல்லா’ நீர்மின் திட்டத்தை நிறைவேற்றும் அளவிற்கு தொழில்நுட்பங்களோ, இயந்திர வடிவமைப்புகள் இல்லாதால், இதை நிறைவேற்றுவது சிரமம் என்பதால் இத்திட்டம் கைவிடப்படுவதாகவும், அதற்கு பதிலாக தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் இரு கட்டங்களாக செயல்படுத்தும் வகையில் மறுஆய்வு செய்யப்பட உள்ளதாக 2017ஆம் ஆண்டு மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்திருந்தனர்.

ரூ.4200 கோடி நிதி ஒதுக்கீடு

குந்தா அருகே அன்னமலை கோயில் அடிவார பகுதியிலும், கன்னேரி அருகேயுள்ள ஸ்ரீராம்நகர் ஆகிய இரு இடங்களில் அணைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது நீர்மின் நிலையமாக மட்டுமின்றி, நீரேற்று குகை மின் நிலையமாக அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.4200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சில்லஹல்லா நீர்மின் திட்டத்திற்கு 15 கிராம மக்கள் எதிர்ப்பு

நிலங்களை இழக்கும் அபாயம்

இத்திட்டத்திற்கு அனுமதிக்கோரி மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணை கட்டுவதால் இப்பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களை இழக்கக்கூடிய அபாயம் உள்ளது. ’நீலகிரி உயிர்க்கோளம்’ யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டத்திற்காக 40 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட உள்ளது.

15 கிராம மக்கள் எதிர்ப்பு

பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டி ராட்சத குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. இதனால் ஏற்பட கூடிய அதிர்வுகளால் இயற்கை இடர்பாடுகள் அபாயமும் அதிமாக உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னேரி, மந்தனை, ஸ்ரீராம்நகர், தங்காடு, ஒரநள்ளி, மணிஹட்டி, மீக்கேரி, பாலகொலா, முதுகுலா, நுந்தளா, பெம்பட்டி, துளிதலை, அப்புகோடு, புதுஹட்டி, கல்லக்கொரை, பாலாடா, முத்தோரை ஆகிய 15 கிராம மக்கள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

போராட்டம் நடத்த முடிவு

இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் நீலகிரியில் வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு பல்வேறு வகையான இடர்பாடுகள் ஏற்படும் என்றும், அரசு இந்த திட்டத்தை கைவிடவில்லை எனில் பலகட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவுசெய்துள்ளனர்.

இதையும் படிங்க: பூச்சிக்கொல்லி பயன்படுத்தினால் அபராதம்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...விவசாயிகள் எதிர்ப்பு!

Intro:OotyBody:உதகை 05-01-20
உதகை அருகே தங்காடு பகுதியில் சில்லஹல்லா நீர்மின் திட்டத்தின் கீழ் அணை கட்டவும், மின் நிலையம் அமைக்கவும் 15 கிராம மக்கள் எதிர்ப்பு. அரசு இத்திட்டத்தை கைவிடவில்லை எனில் தொடர் போராட்டம் நடத்த முடிவு.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே குந்தா நதியின் துணை நதியான சில்லஹல்லா ஆற்றின் குறுக்கே அணை கட்டி ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பிட்டில் ரூ.2 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட சில்லஹல்லா நீர்மின் திட்டமானது செயல்படுத்தப்படும் என கடந்த 2013 ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதனை தொடர்ந்து இத்திட்டத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும் சில்லஹல்லா நீர் தேக்கம் அமைய உள்ள பகுதியில் மின்வாரிய அதிகாரிகள் கடந்த மாதம் ஆய்வுகள் மேற்கொண்டனர். இதனிடையே ஒரே கட்டமாக 2 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட சில்லஹல்லா நீர்மின் திட்டத்தை நிறைவேற்றும் அளவிற்கு தொழிற்நுட்பங்களோ, அல்லது இயந்திர வடிவமைப்புகளோ இல்லாதால் இதனை நிறைவேற்றுவது சிரமம் என்பதால், இத்திட்டம் கைவிடப்படுவதாகவும், அதற்கு பதிலாக தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் இரு கட்டங்களாக செயல்படுத்தும் வகையில் மறு ஆய்வு செய்யப்பட உள்ளதாக கடந்த 2017ம் ஆண்டு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் கடந்த 7 ஆண்டுகளாக இத்திட்டம் ஆரம்ப நிலையிலேயே இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த மின் திட்டத்தை துவக்குவதற்கான ஆயத்த பணிகளை துவக்கியுள்ளது. இதன்படி குந்தா அருகே அன்னமலை கோயில் அடிவார பகுதியிலும், கன்னேரி அருகேயுள்ள ஸ்ரீராம்நகர் ஆகிய இரு இடங்களில் அணைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது நீர்மின் நிலையமாக மட்டுமின்றி, நீரேற்று குகை மின் நிலையமாக அமைக்கப்பட உள்ளது. இதற்கா ரூ.4200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு அனுமதி கோரி மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணை கட்டுவதால் இப்பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களை இழக்க கூடிய அபாயம் உள்ளது. நீலகிரி உயிர்கோளம் யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டத்திற்கான 40 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டி ராட்சத குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. இதனால் ஏற்பட கூடிய அதிர்வுகளால் இயற்கை இடர்பாடுகள் ஏற்பட கூடிய அபாயமும் அதிமாக உள்ளது. இத்திட்டத்திற்காக விவசாயிகளிடம் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. எனவே கன்னேரி, மந்தனை, ஸ்ரீராம்நகர், தங்காடு, ஒரநள்ளி, மணிஹட்டி, மீக்கேரி, பாலகொலா, முதுகுலா, நுந்தளா, பெம்பட்டி, துளிதலை, அப்புகோடு, புதுஹட்டி, கல்லக்கொரை, பாலாடா மற்றும் முத்தோரை ஆகிய 15 கிராம மக்கள் சில்லஹல்லா நீர்மின்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் நீலகிரியில் வசிக்க கூடிய பொதுமக்கள் பல்வேறு வகையான இடர்பாடுகள் ஏற்படும் என தெரிவித்துள்ளனர். அரசு இந்த திட்டததை கைவிடவில்லை எனில் பலகட்ட போராட்டங்கள் நடத்தபடும் என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். உதகை அருகேயுள்ள பாலகொலா கிராமத்தில் நடந்த இக்கூட்டத்தில் 15 கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.