நீலகிரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதியில் சிறுத்தை, காட்டெருமை, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தற்போது, கோடைகாலம் என்பதால் உணவு மற்றும் குடிநீருக்காக குடியிருப்புப் பகுதியில் காட்டெருமைகள் வலம் வருகின்றன.
இந்நிலையில், தரைப்பகுதியில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த ராஜேந்திரன் என்பவரை, திடீரென அங்கு வந்த காட்டெருமை தாக்கியது. இதில், ராஜேந்திரனுக்கு கால், இடுப்பு ஆகிய பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, ராஜேந்திரன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. இதற்கிடையே படுகாயமடைந்த ராஜேந்திரனுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.