உதகை நகரில் கரோனா பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறை, தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 500 பேருக்கு உதகை ஜவுளி சங்கத்தின் சார்பாக சிக்கன் பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவு வழங்கபட்டது.
கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஒன்பது பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு ஐந்து பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்த நிலையில் உதகை நகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள 270க்கும் மேற்பட்ட காவல்துறையினர், 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு உதகை நகர ஜவுளி சங்கத்தின் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் அவர்களின் சேவையை பாராட்டும் விதமாகவும், நன்றி தெரிவிக்கும் விதமாகவும் சிக்கன் பிரியாணி, முட்டை, சிக்கன் குழம்பு உள்ளிட்ட அசைவ உணவுவகைகள் வழங்கபட்டன. உதகை டிஎஸ்பி சரவணன், உதகை நகராட்சி ஆணையர் சரஸ்வதி ஆகியோர் அவற்றை பெற்று பணியாளர்களுக்கு வழங்கினார்கள்.
இதையும் படிங்க: புதுவையில் இதுவரை சுமார் 10 லட்சம் பேருக்கு கரோனா கண்டறிதல் சோதனை!