ETV Bharat / state

நீலகிரியில் கனமழை: நிலச்சரிவில் சிக்கிய வாகனங்கள் மீட்கும் பணி தீவிரம் - Rain in Nilgris

ஊட்டி: நீலகிரியில் கனமழை பெய்துவரும் நிலையில் நிலச்சரிவு காரணமாக மலைப்பாதையில் சிக்கிக்கொண்ட வாகனங்களை மீட்கும் பணியில் அரசு அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

nilgris landslide
author img

By

Published : Aug 12, 2019, 3:09 PM IST

கூடலூர் - பந்தலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த வாரமாக வரலாறு காணாத கனமழை பெய்துவருகிறது. இடைவிடாது பெய்த இந்த மழையின் காரணமாக 100-க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. மேலும், ஏராளமான மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்துள்ளன.

கூடலூரிலிருந்து மலப்புரம், வயநாடு செல்லும் மலைப் பாதையில் தமிழ்நாடு, கேரள அரசுப் பேருந்துகள் உட்பட 50 வாகனங்கள் இங்கு சிக்கிக்கொண்டன. இச்சாலையில் சுமார் எட்டு இடங்களில் பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அதில் சிக்கிக் கொண்ட வாகனங்கள் கடந்த ஆறு நாட்களாக வெளியேற முடியாமல் தவித்துவருகின்றன.

மீட்புப் பணியில் ஈடுபடும் ராணுவம், அரசு அலுலர்கள்

பின்னர், இந்த வாகனங்களை மீட்க வயநாடு ஆட்சியர் நீலகிரி ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்ததையடுத்து, சுமார் 25 பாதுகாப்புப் படையினர் உதவியுடன் ஜேசிபி இயந்திரம் மூலம் கேரளா சாலையில் உள்ள வாகனங்கள் மீட்கும் பணியில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Intro:OotyBody:
உதகை 12-08-19
கனமழையால் கேரளா செல்லும் சாலையில் தமிழக எல்லையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் நடு வழியில் 6 நாட்களாக மாட்டிய வாகனங்கள் . தமிழக , கேரளா அரசு பேருந்து உட்பட 50 வாகனங்களை ராணுவ உதவியுடன் மீட்க்கும் பணி தீவிரம்.

கூடலூர் - பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு காலமாக கடுமையாக வரலாறு காணாத கனமழை பெய்தது . பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வந்தவர்கள் இது போன்ற மழை 1969 ஆண்டு பெய்ததாக கூறினார்கள். கடுமையாக இடைவிடாது பெய்த மழையில் சுமார் 100க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. கூடலூரில் இருந்து கேரளா மாநிலம் மலப்புரம், வயநாடு செல்லும் மலைப்பாதையில் தமிழக எல்லையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் தமிழக - கேரளா அரசு பேருந்து உட்பட கார்கள், லாரிகள் உட்பட 50 வாகனங்கள் மாட்டி கொண்டன. இரு பக்கங்களிலும் 12 கிலோ மீட்டர் தொலைவில் 8 இடங்களில் பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டால் அனைத்து வாகனங்களை மீட்க முடியாமல் 6 நாட்களாக தவித்து வந்தனர். அப்பகுதி கேரளா என்பதால் கேரளா எல்லையில் இருந்து சீர் செய்ய பல நாட்கள் என்பதாலும் மீண்டு மழை பெய்தால் வாகனங்கள் மண்ணில் புதையும் ஆபத்து அதிகமாக உள்ளது. கேரளா வயநாடு ஆட்சியர் நீலகிரி ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து சுமார் 25 ராணுவ வீரர்கள் உதவியுடன்
JCP இயந்திரம் மூலம் கேரளா சாலையில் உள்ள வாகனங்களை மீட்கும் பணியில் தமிழக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.