நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு ஜெகதளா சாலையில் விநாயகர் கோயில் உள்ளது. இதன் அருகில் அறநிலையத் துறை இடத்தில் அமைந்துள்ள மண்டபத்தை வணிக வளாகமாக பயன்படுத்தியதாக இந்து அறநிலையத் துறையினருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, கோவை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் விமலா தலைமையில் அலுவலர்கள் மண்டபத்தை சீல் வைக்க வந்தனர்.
ஆனால், அருவங்காடு பகுதி மக்கள், கோயில் கமிட்டியினர் இணைந்து அறநிலையத் துறை அலுவலர்களை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: 'குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்'