நீலகிரி மாவட்டம் குன்னூரில் தோட்டக்கலைத் துறை சார்பில் சிம்ஸ் பூங்கா செயல்பட்டுவருகிறது. இங்குள்ள பழப்பண்ணையில் கோடை சீசனுக்காக பழச்சாறைக் கொண்டு குளிர் பானங்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
ஆண்டுதோறும் இந்த பழங்களைக் கொண்டு பழச்சாறின் குளிர் பானங்கள், ஊறுகாய் தயாரிக்கும் பணி நடைபெறும். இங்கு தயாரிக்கப்படும் பழச்சாறு, ஊறுகாய் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்படுகிறது.
தற்போது இந்தாண்டு கோடை சீசனுக்காக மருத்துவ குணமுள்ள பேஷன் புரூட், திராட்சை, பைன் ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை கொண்டு ஜூஸ் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அலுவலர் கூறுகையில்,
"2019ஆம் ஆண்டினை காட்டிலும் இந்தாண்டு புதிதாக 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான எட்டிற்கும் மேற்பட்ட புதிய நவீன இயந்திரங்களை கொண்டு குளிர் பானங்கள் உற்பத்தி நடைபெற்றுவருகிறது. இதனால் பழச்சாறு உற்பத்தி இருமடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்பட்டுள்ள குளிர் பானங்கள் அனைத்தும் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: சமுக்தியாம்பிகை அம்மனுக்கு 300 கிலோ பழச்சாறு அபிஷேகம்