ETV Bharat / state

பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. நீலகிரியில் நடந்த கொடூர சம்பவம்! - தோடர் இன மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை

பள்ளி முடிந்து திரும்பிய மாணவியை வீட்டில் விடுவதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Pocso
Pocso
author img

By

Published : Apr 26, 2023, 1:42 PM IST

ஊட்டி: நீலகிரியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஊட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர் தன் கர்ப்பமான மனைவியுடன் வாழ்ந்து வந்து உள்ளார். அந்த இளைஞர் பிரபல சுற்றுலாத்தள பகுதியில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் கஞ்சா, மது உள்ளிட்ட போதைகளுக்கு அடிமையான இளைஞர் சரிவர வேலைக்கு போகாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை, அதே பகுதியைச் சேர்ந்த தனக்கு சுற்றுலாதளத்தில் வேலை வாங்கி கொடுத்தவரின் மகளை, இளைஞர் பார்த்துள்ளார்.

பள்ளி முடிந்து திரும்பிய மாணவியை கண்ட இளைஞர், அவரை வீட்டில் விடுவதாக கூறி அழைத்துச் சென்றதாகவும், யாரும் இல்லாத இடத்தில் வைத்து மாணவியிடம் தகாத முறையில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. பின்னர் நேர்ந்த கொடுமை குறித்து வீட்டில் கூறுவதாக தெரிவித்த சிறுமியை, அந்த இளைஞர் இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

மாணவி மயக்கமடைந்து கிழே விழுந்ததாகவும் அதன் பிறகும் விட்டுவைக்காத இளைஞர் மாணவின் கழுத்தில் இருந்த பள்ளி அடையாள அட்டையின் கயிற்றால் கழுத்தை இறுக்கி மூச்சுத் திணற கொலை செய்துள்ளார். மாணவியின் சடலத்தை அருகில் இருந்த முட்புதரில் வீசிவிட்டு எதுவும் நடக்காதது போல் இளைஞர் சென்றதாக கூறப்படுகிறது.

அதேநேரம் இளைஞர் மாணவியை அழைத்துச் செல்வதை கண்ட அவரது நண்பர்கள் அது குறித்து கேட்டதாகவும் அதற்கு அந்த இளைஞர் மாணவியை பேருந்தில் ஏற்றி விட்டு வந்ததாகவும் அந்த நபர் கூறியுள்ளர்.

பின்னர் மாணவியை காணவில்லை என்று தேடியவர்களுக்கு முட்புதரில் மாணவியின் சடலம் கிடப்பது தெரியவந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மாணவி உயிரிழப்பு குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமைறவான இளைஞரை வலைவீசி தேடி வந்தனர். கடந்த திங்கட்கிழமை வனப்பகுதியில் பதுங்கி இருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதையில் சுற்றித் இளைஞருக்கு வேலை வாங்கிக் கொடுத்தவரின் மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் இளைஞருக்கும், அந்த சிறுமியின் பெற்றோருக்கும் வேறேதும் முன்விரோதம் உள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : தூத்துக்குடி விஏஓ வெட்டிக்கொலை: அமைச்சர்கள், கனிமொழி எம்.பி நேரில் ஆறுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.