நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள காட்டேரி பூங்காவில் ஆண்டுதோறும் ஏப்ரல் மே மாத கோடை காலத்திற்காக, மலர் நாற்றுகள் நடவு பணிகள் மார்ச் மாதத்தில் தொடங்கும்.
அந்த வகையில், இந்த ஆண்டு கோடை காலத்திற்காக 1.70 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவுப்பணி இன்று (மார்ச்.11) தொடங்கியது.
ஜெர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட விதைகளிலிருந்து நாற்றுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதில், சால்வியா, மேரிகோல்டு, ஆஸ்டர், பிளாக்ஸ், டயான்தஸ், சூரிய காந்தி உள்ளிட்ட 30 வகைகள் நடவு செய்யப்பட உள்ளன.
ஏப்ரல் மே மாதங்களில் பூக்கள் பூத்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலை துறையினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மாணவர்களின் சாதி, ஆதார் விவரங்களை நீக்க உத்தரவு - பள்ளிக்கல்வித்துறை