நீலகிரி: குன்னூர், கோத்தகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த மாதங்களில் பனி மற்றும் உறைப்பனி தாக்கத்தால் மலைத்தோட்ட காய்கறிகள் மற்றும் தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்டது. மேலும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இரவில் லேசான குளிர் ஏற்பட்டு வந்தது.
காலநிலை மாற்றத்தால் தற்போது திடீரென உறை பனியின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. இதன், காரணமாக வாகனங்களின் மேற்பரப்பில் பனிப்பொழிவு படர்ந்து காணப்படுகிறது. மேலும், புல் தரைகளில் வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.
வாகனங்கள் இயக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் தேயிலை விவசாயம் வெகுவாக பாதிக்கப்படும் என்றும் விவசாயிகள் கவலைத் தெரிவித்துள்ளனர். உள்ளூர்வாசிகள் தங்கள் உடலை சூடேற்றிக் கொள்ள பகல் நேரங்களில் தீ மூட்டி உடலை சூடேற்றிக் கொள்கின்றனர். மீண்டும் பனிப் பொழிவால் இயல்பு வாழ்க்கை நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காட்டெருமைகள் அட்டூழியத்தால் விவசாயிக்கு கால் முறிவு - உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை