நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே உள்ள எல்லநள்ளி பகுதியில் தனியாா் ஊசி தொழிற்சாலை ஒன்று செயல்பட்டுவருகிறது. இங்கு மருத்துவத்துக்கான ஊசிகள், சிறிய கொக்கிகள் தயாரிக்கப்பட்டுவருகின்றன.
இந்தத் தொழிற்சாலையில் 300க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துவருகின்றனர். ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதையடுத்து சுழற்சி முறையில் 170 பேர் தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்து பணிபுரிந்துவந்தனர்.
சமீபத்தில் அத்தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கோவைக்குச் சென்றுவிட்டு குன்னூருக்குத் திரும்பியுள்ளார். பின்னர் இங்கு பணியை முடித்துவிட்டு மீண்டும் கோவைக்குச் சென்றுள்ளார்.
இதையடுத்து சுகாதாரத் துறையினர் அவருக்குப் பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனை முடிவில் அவருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருடன் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் பாிசோதனை செய்யப்பட்டுவருகிறது. மேலும் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊழியருக்கு கரோனா: வட்டாட்சியர் அலுவலகம் மூடல்