நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தமிழ்நாடு - கேரளா எல்லையில் உள்ள தாளூரில் நீலகிரி கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் திருக்குறளை கட்டாய பாடமாக்க கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் எழுதப்பட்டுள்ள நூறு குறட்பாக்களை மலையாளம் மற்றும் ஆங்கில மொழிகளில் மொழிபெயர்த்து அதனை பாடமாக கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த நூறு திருக்குறள்களை மாணவர்கள் கட்டாயமாக படிக்கவுள்ளனர். அதற்காக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கூறுகையில், மனித குலத்திற்கே வழிகாட்டுதலாகவும், வாழ்க்கை தரத்தையும், மாண்பையும் எடுத்துச் சொல்லும் உலக பொதுமறையான திருக்குறளை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க நிர்வாகம் எண்ணியது. மொத்தமுள்ள ஆயிரத்து 330 குரல்களிலிருந்து மாணவர்களின் வாழ்க்கை தரம் சிறக்க குறிப்பிட்ட நூறு குறட்பாக்களை தேர்வு செய்து அதை மலையாள மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் மலையாளம் மற்றும் ஆங்கில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்கிறது.
மாணவர்கள் அனைவரும் 3 ஆண்டுகால கல்லூரி படிப்பில், திருக்குறளையும் சேர்த்து படிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பாரதிய ஜன சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?' - சர்ச்சையைக் கிளப்பிய சிபிஎஸ்இ