நீலகிரி: மாவட்டத்தில் கரோனா பரவல் குறைந்து வருகிறது. கரோனா பரவல் குறைந்துள்ளதால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் உதகையில் அலைமோதுகிறது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவின் மகனுக்கு கரோனா உறுதியானதால், அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார்.
ஆனால், தற்போது ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கும் கரோனா உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: தீபாவளி பர்சேசிங் - குவிந்த மக்கள் - காற்றில் பறந்த கரோனா நெறிமுறைகள்!