தமிழ்நாடு முழுவதும் வரும் 15ஆம் தேதி பொங்கல் விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. பொங்கல் விழாவினை சிறப்பிக்கும் வகையில் குன்னூர் ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பாரம்பரிய உடையணிந்து சுற்றுலாப் பயணிகளுடன் இணைந்து பொங்கலிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இதேபோன்று ரயில் நிலையம் கோலங்கள் மற்றும் மா இலை தோரணங்களுடன் அலங்கரிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்பட்டது.
இதையும் படிங்க: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்காததால் சாலை மறியல்