தமிழ்நாடு முழுவதும் பெண்கள், குழந்தைகள் கல்லூரி மாணவியர்களுக்கு எதிராக நடக்கும் குற்றச்சம்பவங்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு காவல் துறையினர் எடுத்து வருகின்றனர். அந்தவகையில், காவல்துறை புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று குன்னூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
இதில், காவலன் செயலி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. அவசர காலங்களில் பெண்கள் இந்த செயலி மூலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தால் அடுத்த ஐந்து நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு விரைவாக வந்து விடுவர். இதனால், காவலன் செயலியை இன்று பெரும்பாலான பெண்கள்செல்ஃபோன்களில் இருக்க வேண்டியது அவசியமாகி உள்ளது.
இதுகுறித்து பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். இக்காவலன் செயலி வாயிலாக பெரும்பாலான புகார்களை ஆய்வு செய்து தகவலை உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பபடும்.
இதையடுத்து, காவல் நிலையம் ரோந்து பணியில் உள்ள காவல் துறையினருக்கு அனுப்புவர் காவல்துறையினர் எங்கிருந்தாலும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவரை காப்பாற்றுவர்.
இயற்கை பேரழிவுகள், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முற்படுதல் உள்ளிட்ட அவசர காலங்களில் இச்செயலியை பயன்படுத்தலாம். இந்த செயலியை செல்ஃபோன் பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
செல்ஃபோன் முகப்பு திரையில் காவலன் செயலி எஸ் ஓ எஸ் என்ற பட்டன் தெரியும், அதை ஆபத்து காலங்களில் அழுத்தியவுடன் ஐந்து வினாடிகளுக்குப் பின் பாதிப்புக்குள்ளான நபரின் இருப்பிடம் ஜிபிஎஸ் வாயிலாக காவல் துறையினருக்கு சென்றுவிடும்.
உடனடியாக ஆபத்தில் உள்ள நபரை காவல்துறையினர் தொடர்பு கொண்டு அவசரகால தொடர்புக்கு ஒரு எஸ் எம் எஸ் எச்சரிக்கை அனுப்பப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: