நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதிபெற்று கட்டுப்பாடுகளுடன் தேயிலை தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன.
மேலும், தேயிலை தோட்டங்களில் பணிபுரியவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசுக்கு சொந்தமான இன்ட்கோ தொழிற்சாலை ஊழியர்கள் லாரியில் கூட்டம் கூட்டமாக வேலைக்குச் சென்றுள்ளனர். இதனைக் கண்ட காவல் துறையினர், லாரிகளில் வந்தத் தொழிலாளர்களை சமூக இடைவெளியுடன் செல்லுமாறு எச்சரித்து அனுப்பினர்.
இதையும் படிங்க:கரோனா அச்சம் தெரியாமல் மீன் மார்க்கெட்டில் அலை மோதிய மக்கள்