சுற்றுலா நகரமாக உதகை, சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமாக தங்கும் விடுதிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டேஜ்களை ஓயோ என்ற தனியார் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்டத் தொகை வழங்குவதாகக் கூறி விடுதி உரிமையாளர்களிடம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணம் வழங்காமல் அந்நிறுவனம் இழுத்தடிப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஒப்பந்த நிறுவனம் சரியான பதிலும் தெரிவிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதனால் ஓயோ தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள விடுதியாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், "தங்களுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகைகளை கூடிய விரைவில் பெற்றுத் தர வேண்டும். அந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தது.
இதையும் படிங்க: ஈரோட்டில் பாதுகாப்பு வசதிகளுடன் பெண்கள் விடுதி