ETV Bharat / state

அட்டகாசமாக மாறிய மலை ரயில்.. புதிய பெட்டிகளுடன் வெள்ளோட்டம்... - குன்னூரில் புதிய வகை பெட்டிகள் சோதனை

நீலகிரியில் உள்ள நூற்றாண்டு பழமை மிக்க மலை ரயில் பாதையில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை புதிய வகை பெட்டிகளின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

Nilgiri mountain train
குன்னூர் மலை ரயில்
author img

By

Published : Mar 21, 2023, 7:13 PM IST

மலை ரயிலில் பாதையில் மேட்டுப்பாளையம் - குன்னூர் புதிய வகை பெட்டிகள் சோதனை ஓட்டம்

நீலகிரி: குன்னூர் நூற்றாண்டு பழமைமிக்க யுனெஸ்கோ அந்தஸ்துபெற்றது மலை ரயில், பழமை மாறாமல் அதே நிலையில் நூறு ஆண்டுகள் தாண்டியும் தன்னுடைய சேவையை செய்து கொண்டு இருக்கிறது. இந்த மலை ரயிலில் உள்நாட்டு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை பயணம் செய்வர்.

அவ்வாறு சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்யும்போது அழகிய இயற்கை காட்சிகள், பசுமை நிறைந்த காடுகள், மலைகள் நீரோடைகள் மற்றும் ஏராளமான வனவிலங்குகள் என அனைத்தையும் கண்டு ரசித்து இந்த மலை ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். தற்போது இந்த மலை ரயில் பெட்டியை சுற்றுலா பயணிகளின் கண் கவரும் காட்சிகளைப் பார்க்கும் வகையில் கண்ணாடிகள் அமைத்து புதிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த புதிய வகை மலை ரயில் பெட்டிகள் ஒன்றிய அரசின் ஐசிஎப் ரயில்வே கீழ் இயங்கும். தற்போது, ஐந்து புதிய ரயில்வே பெட்டிகள் ஐசிஎப் ரயில்வே தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்ட நிலையில், மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை வெற்றிகரமான சோதனை ஓட்டத்தை நிறைவு செய்தது. இந்நிலையில் மீண்டும் மேட்டுப்பாளையம் வரை ரயில் பெட்டிகள் குன்னூரில் இருந்து இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஊரடங்கு போட வேண்டிய நிலை.? மா.சுப்பிரமணியன் விளக்கம்.!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.