நீலகிரி மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரையுள்ள 46.5 கிமீ., தொலைவில் மலை ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதையின் இருபுறமும் அழகிய இயற்கைக் காட்சிகளைக் கண்டு, களிக்கவே சுற்றுலாப் பயணிகள் மலை ரயிலில் ஆர்வமுடன் பயணம் செய்வர்.
கரோனா ஊரடங்கிற்குப் பின்னர், சமீபத்தில் தான் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதே போன்று மலை ரயில் பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால், ரயில்வே ஊழியர்கள் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக, மேட்டுப்பாளையம் குன்னூர் இடையிலான ரயில் போக்குவரத்து இன்று(ஜனவரி 10) ஒருநாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குன்னூர் உதகை இடையிலான ரயில் போக்குவரத்து வழக்கம்போல் இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு!