நீலகிரி: மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் போக்குவரத்து 1908 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மலைகளின் இடையே நூற்றாண்டு காலமாக இயங்கும் ரயிலில் தங்களின் வாழ்நாளில் ஒரு நாளாவது பயணிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் விருப்பமாக உள்ளது. நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நிச்சயம் இதில் செல்ல ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இந்த மலை ரயில் 208 வளைவுகளின் வழியாக வளைந்து, 16 குகைகளுக்குள் புகுந்து வெளியேறி, 250 பாலங்களைக் கடந்து ஐந்து மணி நேரம் பயணம்செய்வது சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சிறப்புப் பெற்ற மலை ரயில், மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரை 1899ஆம் ஆண்டு சேவைக்காகத் தொடங்கப்பட்டது.
1908ஆம் ஆண்டுமுதல் குன்னூரிலிருந்து ஊட்டி வரை நீட்டிக்கப்பட்டது. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை 46.61 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது. 2005ஆம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக இந்த மலை ரயிலுக்கு யுனெஸ்கோ அந்தஸ்து வழங்கப்பட்டது. பழமை வாய்ந்த நிலக்கரி நீராவி எஞ்சின் நூற்றாண்டுகளுக்கு மேலாக மலைப்பாதையில் இயக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு நீராவி என்ஜின்கள் பர்னஸ் ஆயில் என்ஜினாக மாற்றப்பட்டது. இதில் ஒரு என்ஜினை டீசல் என்ஜினாக மாற்றும் பணி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குன்னூர் லோகோ பணிமனையில் என்ஜினுக்கு நாசில் பொருத்தும் பணி நடைபெற்று வந்தது. இதனையடுத்து, இந்த ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து முதல் முறையாக குன்னூர் மேட்டுப்பாளையம் வரையிலான ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதில் 120க்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் பயணம் மேற்கொண்டனர். நீராவி என்ஜின் மூலம் பயணம் மேற்கொள்வது தங்களுக்கு புது அனுபவத்தை ஏற்படுத்தி உள்ளதாகச் சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அய்யோ அதியசத்த பாருங்களேன்!.. தினமும் கோயிலில் மணி அடிக்கும் ஆட்டுக்குட்டி!