நீலகிரி மாவட்டத்தில், லில்லியம், கார்னேஷன், ஜெர்பரா உள்பட கொய்மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மொட்டுகளாக அறுவடை செய்யும் கொய்மலர்கள், சென்னை, பெங்களூரு, மும்பை உள்பட பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு சென்று ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
கரோனா பாதிப்பு ஊரடங்கால் 100 நாட்களுக்கும் மேலாக மலர்கள், விற்பனை செய்ய முடியவில்லை. இந்நிலையில், ஏற்கனவே பசுமைகுடில்களில் வளர்க்கப்பட்ட லில்லியம், கார்னேஷன் உள்ளிட்டவை வாடியது.
இதனால் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனினும், கர்நாடக மாநிலம் ஊரடங்கு தளர்வு காரணமாக 10 முதல் 20 சதவீதம் வரை கொய்மலர்கள் விற்பனைக்கு கொண்டு சென்றாலும் 3 மடங்கு விலை குறைந்துள்ளது.
இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கொய்மலர் விவசாயிகள் வேதனை அடைந்து வருவதுடன் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர்.