கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 45 நாள்களுக்கு முன்பு மூடப்பட்ட டாஸ்மார்க் கடைகள் நேற்று திறக்கபட்டன. அதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர் , கூடலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் 74 மதுக்கடைகள் உள்ளன.
அதில், 61 கடைகள் திறக்கப்பட்டு மீதமுள்ள 13 கடைகள் கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட பகுதியில் உள்ளதால் திறக்கப்படவில்லை. மேலும் கடைகளில் கிருமி நாசினி தெளிக்கபட்டது. அதேபோல், மதுக்கடை ஊழியர்கள் முகக்கவசம், கையுறை உள்ளிட்டவை அணிந்து பணி செய்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, மதுக்கடைக்கு மது வாங்க வருபவர்களுக்கு சானிடைசர் மூலம கைகளை சுத்தம் செய்த பின்னரே மதுபாட்டில் வழங்கப்பட்டது. குறிப்பாக, ஆதார் அட்டை காண்பித்தால் மட்டுமே மது வழங்கப்படுகிறது.
எந்த மதுக்கடையிலும் டோக்கன்கள் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை மதுக்கடைகள் கிராமப் பகுதிகளில் இல்லாததால், பேருந்துகள் ஓடாத நிலையில் மதுப்பிரியர்கள் குடிக்க ஆர்வமின்றி கடைகள் மந்த நிலையில் காணப்பட்டன.
இதையும் படிங்க:தடைகளைத் தாண்டி மதுவாங்குவது எப்படி? குடிமகனின் ஒத்திகை வீடியோ!