நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் வெளியே நடமாடுவதைத் தடுக்க காவல் துறையினர் பல்வேறு விழிப்புணர்வுகளை வழங்கிவருகின்றனர். அதேபோல், ட்ரோன் கேமரா மூலம் பொதுமக்கள் நடமாட்டத்தைக் கண்காணிப்பது, பல்வேறு விதங்களில் தண்டனை வழங்குவது போன்ற செயல்களில் காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, தற்போது சாலையில் படங்களை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது ட்ரெண்டிங் ஆகியுள்ளது. அந்த வகையில், நீலகிரி மாவட்டம், குன்னூரில் சமூகப் பணியில் ஈடுபட்டுவரும் கன்சர்வ் எர்த் பவுண்டேஷன் என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் பேருந்து நிலையம் அருகே சாலையில் பிரமாண்டமான ஓவியம் வரைந்து கரோனா நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:கரோனா: சென்னையில் 255... அதில் ராயபுரத்தில் மட்டும் 91...!