கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைப் பகுதிகளில் புதிய நீரூற்றுக்கள் உருவாகியுள்ளது. அதன் அருகே நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உருவாகியுள்ள புதிய நீரூற்றுகளில் அதிக அளவில் தண்ணீர் வருகிறது. மேலும், டால்பின் நோஸ் பகுதியில் கேத்தரின் நீர்வீழ்ச்சியில் அதிக தண்ணீர் வருவதால் அதை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும், இம்மழை அதிக மகசூல் ஈட்ட வழிவகுக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நீலகிரி மலை ரயிலில் முதல்முறையாக 'பிரேக்ஸ் உமன்' நியமனம்!