ETV Bharat / state

நீலகிரி மலை ரயிலுக்கு ரூ.80 கோடியில் புதிய என்ஜின் - ரயில்வே திட்டம்!

Nilgiri Mountain Train: நீலகிரி மலை ரயிலில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஹைட்ரஜனில் இயங்கும் என்ஜினை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் நிறைவடைந்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பசுமை ரயில்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 8:02 PM IST

Updated : Aug 23, 2023, 8:14 PM IST

உதகை: நீலகிரி மலை ரயில் என்று அழைக்கப்படும் ஊட்டி மலை ரயில், மிக நீண்ட வரலாறு கொண்டது. 1854ஆம் ஆண்டு ஊட்டி மலையில் ரயில் பாதை அமைக்கும் திட்டம் முதன் முதலாக உருவாக்கப்பட்டது. மலைப்பகுதி மிகவும் கரடு முரடாக இருந்ததால் இந்தப் பணி தாமதடைந்து, 1891ஆம் ஆண்டு தான் ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது. முதலில், 1899ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையில் ரயில் பாதை அமைக்கப்பட்டது. அதன் பின்னர் 1908ஆம் ஆண்டு உதகமண்டலம் வரை இந்த ரயில் பாதை நீட்டிக்கப்பட்டது.

அந்த ஆண்டு முதல் மலை ரயில் போக்குவரத்து தொய்வின்றி தொடங்கி நடந்து வருகிறது. உலக அளவில் இதுபோன்ற மலை ரயில் சேவை ஓரிரு இடங்களில் தான் உள்ளன. கடந்த 2005ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு, நீலகிரி மலை ரயிலை உலக பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது. யுனெஸ்கோவின் புராதன அந்தஸ்து பெற்றது என்று, ஏகப்பட்ட புகழ் கிரீடங்கள் ஊட்டி மலை ரயிலுக்கு உள்ளது.

இந்த ரயிலில் பயணம் செய்தால் இயற்கை சூழ்நிலையை அனுபவித்தபடி 208 வளைவுகள் வழியாக வளைந்து, நெளிந்தபடி, 16 குகைகளுக்குள் புகுந்து வெளியேறியபடி, 250 பாலங்களை கடந்து 5 மணி நேரம் பயணம் செய்ய உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.

இந்த மலை ரயிலை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசின் பசுமை ரயில்கள் திட்டத்தின் கீழ், நீலகிரி மலை ரயிலை, ஹைட்ரஜன் எரிபொருளுக்கு மாற்றி இயக்க திட்டமிடப்பட்டு இதற்காக 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஊட்டி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

மேட்டுப்பாளையம் - குன்னுார் இடையே, 'மீட்டர் கேஜ்' பாதையில், 'எக்ஸ் கிளாஸ்' என்ஜின்களால், 15 கி.மீ., வேகத்திற்கும் குறைவாக இயக்கப்படும் ரயிலில் பயணிப்போர், இயற்கை காட்சிகளை ரசித்து செல்வது இதன் சிறப்பு. தற்போது, இதை இயக்க பர்னஸ் ஆயில், டீசல் என்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மத்திய ரயில்வே அமைச்சகம், அதிவேக வந்தே பாரத் ரயிலை தொடங்கியது போன்று, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத, ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வகையில், 8 இடங்களில், 35 ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், ஊட்டி - மேட்டுப்பாளையம்; டார்ஜ்லிங் - ஹிமாச்சலம் உட்பட, எட்டு பாரம்பரிய ரயில்களை, பசுமை ரயில் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தில், 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நீலகிரி மலை பாதையில் ஹைட்ரஜனில் இயங்கும் என்ஜினை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் நிறைவடைந்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பசுமை ரயில்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மனைவிக்கு You tube பார்த்து பிரசவம் செய்த இயற்கை ஆர்வலர்.. பரிதாபமாக உயிரிழந்த மனைவி..

Last Updated : Aug 23, 2023, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.