நீலகிரி: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக எழுந்த தகவலின் பெயரில் அம்மாநில காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில் நக்சல்களுடன் துப்பாக்கி சூடு நடைபெற்று. இச்சம்பவத்தில் இருந்து தப்பிய நக்சல்கள் சிலர் தமிழ்நாடு-கேரள எல்லை வழியாக, நீலகிரி மாவட்டத்திற்குள் ஊடுருவக்கூடும் என்பதால் அம்மாவட்ட காவல்துறையினர் எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குன்னூர் அருகே அருவங்காடு காவல் நிலைய திறப்பு விழாவிற்கு வருகை தந்த எஸ்.பி சசிமோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நீலகிரி மாவட்ட எல்லைப் பகுதிகளில் இரண்டு நக்சல் தடுப்பு பிரிவினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எல்லைப் பகுதிகளில் உள்ள 16 சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் கூடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆதிவாசி கிராமங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. யாரேனும் புதிதாக நபர்கள் வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர் " என்றார்.
இதையும் படிங்க: நக்சல் தாக்குதலில் ரிசர்வ் படை காவலர் உயிரிழப்பு