ETV Bharat / state

மாணவிகள் நாட்டிற்காக பணியாற்ற முன்வர வேண்டும் - இந்தியாவின் முதலாவது விண்வெளி வீரர்

நாட்டு மக்கள் இந்திய பாதுகாப்புப் படைகள் மீது நம்பிக்கையும், மரியாதையும் கொண்டுள்ளதாகவும், தேசிய மாணவர் படையில் இணைந்துள்ள மாணவிகள் நீங்கள் நாட்டிற்காக பணியாற்ற முன்வர வேண்டுமென இந்தியாவின் முதலாவது விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மா கூறியுள்ளார்.

தேசிய அளவிலான என்சிசி மாணவிகளின் மலையேற்றப் பயிற்சி முகாம்

author img

By

Published : Nov 1, 2022, 8:39 PM IST

நீலகிரி: வெலிங்டனில் இன்று (நவ.01) தேசிய அளவிலான மலையேற்றப் பயணத்தில் பங்கேற்றுள்ள தேசிய மாணவர் படை மாணவிகளிடையே உரையாற்றிய ககன்யான் திட்டத்தின தேசிய ஆலோசகரும், இந்தியாவின் முதலாவது விண்வெளி வீரருமான ராகேஷ் ஷர்மா பேசுகையில், தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பல தரப்பட்ட பயிற்சிகள் அளிக்கப்படுவதாகவும், அதை உரிய முறையில் பயன்படுத்தி நாட்டிற்குத் தேவைப்படும் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள முன்வரவேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய அவர், விண்வெளி துறையில் பல்வேறு சவால்களுக்கிடையே தொழில்நுட்பம் மறுக்கப்பட்ட ஆட்சிக் காலத்திலும் இந்தியா இந்த அளவுக்கு நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும், அதற்காகத் தாம் பெருமைப்படுவதாகவும் கூறினார்.

விண்வெளித்துறையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளச் செலவினங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு தனியார் பங்களிப்பு தேவைப்படுவதாகவும் ராகேஷ் ஷர்மா கூறியுள்ளார்.

தேசிய அளவிலான என்சிசி மாணவிகளின் மலையேற்றப் பயிற்சி முகாம்

இதையும் படிங்க:அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: அண்ணாமலை உள்பட பாஜகவினர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.